விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் கதாநாயகி பாக்கியா கடந்த வாரம் ஒரு பெரிய சமையல் ஆடரை எடுத்து அதனை பக்கத்து வீட்டிலுள்ள இல்லத்தரசிகள் சேர்ந்து அந்த சமையல் ஆர்டரை சிறப்பாக செய்து முடித்தார். அதற்கு மூன்று லட்சம் ரூபாய் அவரது வங்கி கணக்கில் போடப்பட்டது.
இந்நிலையில் பாக்கியாவிற்கு தெரியாத நபரிடம் இருந்து வந்த போன் காலில் உங்கள் ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டதால் அக்கவுண்டில் இருந்து பணம் எடுக்க முடியாது என்று ஒருவர் பொய்யாக கூறியுள்ளார். இதை நம்பிய பாக்கியா ஏடிஎம் கார்டு விவரங்களை கொடுத்து விடுகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பாக்கியா முன்னேறுவது கோபியை விட இயக்குனருக்கு தான் பிடிக்கவில்லை என்று வேடிக்கையாக கருத்து தெரிவித்துள்ளனர். அதோடு இந்த காட்சிகள் பலருக்கு பாடமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர்.