Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாக்கெட்டில் இருந்த ரூ.250க்காக… தீடிரென சூர்யா செய்த செயல்… மடக்கி பிடித்த வில்சன் …!!!

கோவையில் வாலிபரின் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் , பீளமேடு கருப்பண்ண கவுண்டர் லே-அவுட்டை பகுதியில் வசித்து வருபவர் வில்சன். 20 வயதுடைய இவர் ந.வ 4 தேதி ஹோப்காலேஜ் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த  வாலிபர் திடீரென  வில்சனின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.270-ஐ பணத்தை பிடுங்கி  கொண்டு தப்பி ஓடியுள்ளார்.

இதில்  உஷார்  அடைந்த வில்சன் பொதுமக்களின் உதவியுடன் கொள்ளையனை மடக்கி பிடித்து பீளமேடு காவல் துறையிடம் கொண்டு சென்றனர். அதில் அவரை விசாரித்ததில் ஒன்டிபுதூர் சேர்ந்த சூர்யா வயது 20  என்றும்  தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறை கைது செய்த கொள்ளையனை சிறையில் அடைத்துள்ளது.

Categories

Tech |