எனிமி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் எனிமி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றுள்ளது. இதில் பேசிய நடிகர் விஷால், ‘என்னுடைய நல்ல நண்பர் புனித் ராஜ்குமார் இறந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனிமி தீபாவளிக்கு ரிலீஸாகிறது. ஒவ்வொரு நாளும் நான் வீட்டிற்கு சந்தோசமாக போவதற்கு காரணம் தயாரிப்பாளர் வினோத்குமார் தான். அவர் பணத்தை மனதில் வைத்து இந்த படத்தை தயாரிக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் ஓடிடிக்கு பெரியவிலைக்கு இந்தபடத்தை விற்றிருக்கலாம். ஆனால் ரசிகர்கள் திரையரங்குகளில் ரசிக்க வேண்டும் என்று தியேட்டருக்கு இந்த படத்தை கொண்டு வந்ததற்காக அவரை வணங்க வேண்டும்.
இயக்குனர் ஆனந்த் ஷங்கர் ஈகோ இல்லாத மனிதர். என்னிடம் அவர் கதை சொன்னபோது, இந்த படத்தில் ஆர்யா இருந்தால் நன்றாக இருக்கும், அவரது கேரக்டரை இன்னும் வலுவாக்கினால் நன்றாக இருக்கும் என சொன்னேன். அவருடைய கற்பனை தான் இந்த படம். உலகம் அழியப்போகிறது என சொன்னால், அசால்டாக இரு சைக்கிளிங் முடித்துவிட்டு வருகிறேன் என சொல்பவர் ஆர்யா. எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார். ஆனால் இப்போது திடீரென நன்றாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்த படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கும்போது, அப்போதுதான் அவர் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்துவிட்டு வந்தார். நிஜமாகவே பாக்ஸிங் கற்றுக் கொண்டு வந்து என்னை அடி வெளுத்து விட்டான். ஏற்கனவே நாங்கள் இருவரும் அவன் இவன் படத்தில் இணைந்து நடித்திருந்தோம். இந்த படமும் சூப்பராக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.