டிரைக்டர் எஸ்.எஸ் ராஜமெளலி இந்திய சினிமாவில் மாபெரும் வசூல் சாதனை படைத்த படங்களை கொடுத்திருக்கிறார். அதுமட்டுன்றி ஆஸ்கார் விருதுக்கு போட்டி போடும் அளவுக்கு இந்திய சினிமாவின் தரத்தை அவர் உயர்த்தி இருக்கிறார். கடந்த அக்டோபர் 10ம் தேதி எஸ்.எஸ் ராஜமெளலி தன் 49வது பிறந்த நாளை கொண்டாடினார். சென்ற 20 வருடங்களில் மட்டும் இவர் 12 படங்களை எடுத்துள்ளார்.
அவற்றில் ராஜமெளலி இயக்கத்தில் இந்த வருட வெளியாகிய “ஆர்ஆர்ஆர்” படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய்தேவ் கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்திருந்தனர். அதுமட்டுமின்றி இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூபாய்.1200 கோடிக்கும் மேல் வசூலித்து கெத்து காட்டியது.
திரைத் துறையில் உலகளவில் உயரியவிருதாக ஆஸ்கார் விருதுக்குரிய போட்டியில் ஆர்ஆர்ஆர் படமும் இருக்கிறது. இதுவரையிலும் எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கிய 12 படங்களுமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சாதனையை இந்திய சினிமாவில் இதுவரையிலும் யாரும் நிகழ்த்தியதில்லை.