Categories
உலக செய்திகள்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் – இந்திய ராணுவம் விளக்கம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் எந்த ஒரு தாக்குதலும் நடத்தப்படவில்லை என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் எல்லை பகுதிகளில் அண்மையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 3 பேர் பொதுமக்கள் 3 பேர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர். இதற்கு இந்திய ராணுவம் தந்த பதிலடியில் 8 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி அந்நாட்டு ராணுவ நிலைகளை அளித்ததாக தகவல் வெளியாகியது. இதற்கு விளக்கம் அளித்துள்ள இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் எந்த ஒரு தாக்குதலும் நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளது.

Categories

Tech |