Categories
உலக செய்திகள்

பாக்.,கில் அதிர்ச்சி…. “சாங் சத்தம் அதிகமா இருக்கு”… கம்மி பண்ண சொன்ன கிறிஸ்தவ வாலிபர் கல்லால் அடித்துக் கொலை… மைனாரிட்டி சமூக மக்கள் மீது தொடரும் தாக்குதல்..!!

பாகிஸ்தானில் மைனாரிட்டி சமூக மக்கள் மீது தாக்குதல் தொடர்ந்து வருவது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் ஜங்கல் டேரா என்ற கிராமம் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது. இங்கு வசித்து வந்தவர் முஸ்டாக் அகமது (வயது41). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள மக்கள் கும்பலாக சேர்ந்து அகமதுவை தரதரவென இழுத்து சென்று மரத்தில் கட்டி வைத்துள்ளதாக தெரிகிறது. ஏனென்றால்  இந்த அகமது குர்ஆன் நூல்களின் பக்கங்களை எல்லாம் கிழித்து, தீவைத்து எரித்து விட்டதாக கூறுகின்றனர்.

மேலும் அங்கு உள்ள அனைவரும் அவரை கல்லால் தாக்கியுள்ளனர். இந்த நிலையில் அகமது அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அவர்கள் அகமதுவை படுகொலை செய்ததோடு அவரின் உடலையும் மரத்தில் கட்டி தொங்க விட்டுள்ளனர். உலகளவில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் இதேபோன்று கடந்த டிசம்பர் மாதம் ஒரு சம்பவம் நடந்துள்ளது.பிரியந்தா குமாரா (வயது 40) என்ற இலங்கையை சேர்ந்த இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்திலுள்ள ஒரு தொழிற்சாலையில் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவர் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை கிழித்தாக  கூறப்படுகிறது. மேலும் அந்த போஸ்டரில் குரானின் வாசகங்களும் அச்சிடப்பட்டு இருந்ததால்,100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து அவரை தரதரவென சாலைக்கு இழுத்து வந்து கட்டையாலேயே சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவரை நடுரோட்டில் உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் உலகையே உலுக்கியது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் பஞ்சாப் மாகாணம் லாகூர் நகரில் உள்ள வால்டன் என்ற பகுதியில், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே ஏற்பட்ட மோதலால் கிறிஸ்தவ வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அந்த பகுதியை சேர்ந்தவர் பர்வேஸ் மசீ (வயது 25). கிறிஸ்தவரான இவர் தனது பக்கத்து வீட்டில் உள்ள சோனி மாலிக் என்பவரிடம் பாட்டு சத்தம் அதிகமாக இருக்கிறது. அதனால் ஒலியை  கொஞ்சம் குறைக்கும்படி கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட மோதலால் மாலிக் மற்றும் அவருடன் சேர்ந்த கும்பல் பர்வேஸை செங்கற்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் அந்த கும்பல் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளை உடனே கைது செய்யும்படியாக வலியுறுத்தி வருகின்றனர. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை அடுத்து  இரு தரப்பினர் இடையே மோதல்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான் நாட்டில் முஸ்லிம்கள் தவிர்த்து பிற மதத்தினர் மைனாரிட்டிகளாக உள்ளனர். இதனால் இந்த சமூக மக்கள் மீது தாக்குதல் நடத்துவது பாகிஸ்தானில் தொடர்ந்து வருகிறது. உயிரிழந்த பர்வேசுக்கு 7 சகோதரிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |