Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாக்.,மருமகளை இழந்த ஜிம்பாப்வே..! நீங்க கண்டிப்பா கல்யாணம் பண்ணனும்…. இல்லனா நெதர்லாந்து பையன கட்டுங்க…. இந்திய ரசிகர்கள் கிண்டல் ட்விட்…!!

இந்தியாவிடம்  தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் மருமகளை (ஷேகர் ஷின்வாரி) ஜிம்பாப்வே இழந்துள்ளது. அதேநேரத்தில் ஜிம்பாப்வே பையனை நீங்கள் திருமணம் செய்ய வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. இதில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் கடந்த அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, தொடர்ந்து அக்., 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது.. குரூப் 1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடியது. இதில் குரூப் 1 பிரிவிலிருந்து இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறியது..

முன்னதாக நேற்று கடைசியாக மூன்று சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்றது. அதில் தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் முதலில் மோதியது. அதன் பின் இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. மூன்றாவதாக ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதியது.

இந்த போட்டிகள் நடைபெறுவதற்கு முன்னதாக பாகிஸ்தான் நடிகை பாகிஸ்தான் நடிகை ஷேகர் ஷின்வாரி இந்திய அணியை  ஜிம்பாப்வே அணி வீழ்த்தினால், அந்த நாட்டு பயனை நான் திருமணம் செய்து கொள்வேன் என ட்விட்டரில் அறிவித்திருந்தார். எப்போதும் இந்தியாவை வீழ்த்தினால் நான் அதை செய்வேன், இதை என ஏதாவது சொல்வார் ஆனால் அதை செய்ய மாட்டார்.

ஏற்கனவே அக்டோபர் 23ஆம் தேதி சூப்பர் 12 போட்டியில் பாகிஸ்தான் – இந்தியா மோதலின் போது இந்த நடிகை ட்விட்டில், இன்று இந்தியா வெற்றி பெற்றால், நான் ட்விட்டரை என்றென்றும் நீக்கிவிடுவேன், திரும்ப வரமாட்டேன் என்று பதிவிட்டிருந்தார். ஆனால் இன்னும் அவர் ட்விட்டரில் இருந்து விலகவில்லை. இதனை குறிப்பிட்ட ஒருவர், அது சரி ஆனால் இது (ட்விட்டரில் இருந்து விலகுவது) எப்போது நடக்கும் என்று கலாய்த்துள்ளார். எனவே இந்திய ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து வந்தனர்..

இந்த சூழலில் தான் நேற்று நடைபெற்ற போட்டியில் எதிர்பாராத விதமாக நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்காவை  வீழ்த்தி அதிர்ச்சி கொடுக்க இந்தியா தோற்காமலேயே பாகிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஒருவேளை தென்னாப்பிரிக்க அணி ஜெயித்திருந்தால், பாகிஸ்தான் வங்கதேசத்தை வீழ்த்தினாலும் இந்திய அணி கட்டாயம் ஜிம்பாப்வே அணியிடம் தோற்றால் தான் அரையிறுதிக்கு செல்ல முடியும்.

ஏனென்றால் இந்தியா தோற்றால் பாகிஸ்தான் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குசெல்லும். காரணம் ஒரே 6 புள்ளியில் இருந்தாலும் பாகிஸ்தான் ரன்ரேட் அதிகமாக இருந்தது. இதனால் ஜிம்பாப்வே வெற்றிபெற வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.. அதில் பாகிஸ்தான் நடிகை ஷேகர் ஷின்வாரியும் ஒருவர். ஆனால் பாகிஸ்தானுக்கு அடித்த லக்கின்படி யாரும் எதிர்பார்க்காத தென்னாப்பிரிக்கா தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் வங்கதேசத்தை வென்று அரை இறுதிக்குள் நுழைந்து விட்டது.

இந்நிலையில் நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்காவை  வீழ்த்தியதால் ஜிம்பாப்வேயின் உதவி இல்லாமலேயே பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது. அதேநேரத்தில் நம் வீட்டுப் பெண் (ஷின்வாரி) அடுத்த நாட்டிற்கு செல்வதா என வெகுண்டு எழுந்த பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை பந்தாடி வெற்றி பெற்றதாக இந்திய ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அதே நேரத்தில் பாகிஸ்தான் மருமகளை ஜிம்பாப்வே அணி பரிதாபமாக இழந்திருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்..

இதற்கிடையே நெதர்லாந்து வெற்றிபெற்ற பின் பாகிஸ்தான் நடிகை ஷேகர் ஷின்வாரி தனது ட்விட்டர் பக்கத்தில், ஜிம்பாப்வே வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் எனக்கு கவலையில்லை, ஏனென்றால் எனது அன்பான பாகிஸ்தான் அணி ஏற்கனவே அரையிறுதியில் உள்ளது. இன்ஷாஅல்லாஹ் நவம்பர் 10ஆம் தேதி பாகிஸ்தான் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது” என்று தெரிவித்தார். இருப்பினும் ஜிம்பாப்வே ரசிகர்கள் தோற்றாலும் பரவாயில்லை நீங்கள் ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்ய வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதில், ரசிகர் ஒருவர் ஜிம்பாப்வே வீரர்கள் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தோல்வியடைந்ததால், நீங்கள் இந்தியர்களில் ஒருவரை திருமணம் செய்யுங்கள் என்று கமெண்ட் செய்தார்.

மேலும் நடிகை ஷேகர் ஷின்வாரி மற்றொரு ட்விட்டில், எனது பிரார்த்தனையாலும், இந்தியத் தரப்பிலிருந்து கடந்த 3 நாட்களாக நான் அனுபவித்த ட்ரோலிங் காரணமாகவும்தான் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது என தெரிவித்துள்ளார். அதற்கு கீழ் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதில் ஒருவர் நீங்கள் எப்போது ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்வீர்கள் என்றும், சிலர் நீங்கள் நெதர்லாந்து வீரரை கட்டிக்கொள்ளுங்கள் ஏனென்றால் அவர்களால் தான் நீங்கள் அரையிறுதிக்கு சென்றுள்ளீர்கள் என்று கிண்டலாக கமெண்ட் செய்துள்ளார் ..

Categories

Tech |