Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாக் வீரர் சாதனையை முறியடித்த மிட்செல் ஸ்டார்க்…. என்ன சாதனை தெரியுமா?

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்  அதிவேகமாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி அங்கு 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ள நிலையில், இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது..

இருப்பினும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட் எடுத்து இருந்தார்.. இந்த விக்கெட்டின் மூலம் அதிவேகமாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை தன் வசமாக்கியுள்ளார்.. அவர் 102 ஒரு நாள் போட்டியில் விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார்..இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர் சக்லைன் முஷ்டாக்கின் சாதனையை முறியடித்துள்ள ஸ்டார்க் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.

இதனால் பாகிஸ்தான் வீரர் முஸ்டாக் இரண்டாம் இடத்திற்கு (104போட்டி) தள்ளப்பட்டுள்ளார்.. அதுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் பிரட் லீ (122 போட்டி) மூன்றாவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் டொனால்ட் (117) நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் வக்கார்  யூனிஸ் ஐந்தாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் சேன் வார்னே (125 போட்டி) ஆறாவது இடத்திலும் உள்ளனர்..

Categories

Tech |