Categories
மாநில செய்திகள்

பாசஞ்சர் ரயில்கள்: வரும் 30 ஆம் தேதி முதல்…. பயணிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் சிறப்பு ரயில்களாக கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்டது. மேலும் அனைத்து பெட்டிகளுமே முன் பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து பாசஞ்சர் ரயில்கள் மற்றும் இணைப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக ரயில்வேதுறை பயணிகளிடம் அதிகமான கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் நலச் சங்கங்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில் மதுரை கோட்டத்தில் ஒரு சில பாசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் மீண்டுமாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த வகையில் மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு வரும் 30ஆம் தேதி முதல் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06651) மதுரையிலிருந்து தினசரி காலை 6:35 மணிக்கு புறப்பட்டு காலை 10:15 மணிக்கு ராமேசுவரம் ரயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06656) ராமேசுவரத்திலிருந்து மாலை 6:05 மணிக்கு புறப்பட்டு இரவு 9:55 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது.
இந்த ரயில்கள் கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாசேத்தி, ராஜகம்பீரம், மானாமதுரை, சூடியூர், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம், வாலாந்தரவை, மண்டபம் கேம்ப், மண்டபம், பாம்பன் போன்ற ரயில் நிலையங்களில் நின்று புறப்படும். ரயிலில் 12 முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். திருச்செந்தூரிலிருந்து ஒரு ரயில் நெல்லைக்கு வரும் 30ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06674) திருச்செந்தூரிலிருந்து தினமும் காலை 7:10 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணிக்கு நெல்லை ரயில் நிலையம் வந்தடைகிறது. மறு மார்க்கத்தில் நெல்லையிலிருந்து இந்த ரயில் (வ.எண்.06677) மாலை 6:45மணிக்கு புறப்பட்டு இரவு 8:30 மணிக்கு திருச்செந்தூர் ரயில் நிலையம் வந்தடைகிறது. இந்த ரெயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகனேரி, குரும்பூர், கச்சனாவிளை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்க நல்லூர், பாளைங்கோட்டை போன்ற ரெயில் நிலையங்களில் நின்றுபுறப்படும்.
ரயிலில் 10 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். நெல்லையிலிருந்து வரும் 30ஆம் தேதி முதல் செங்கோட்டைக்கு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06657) நெல்லையிலிருந்து மாலை 6:15 மணிக்கு புறப்பட்டு இரவு 8:35 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையம் சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து வரும் 31ஆம் தேதி முதல் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06682) செங்கோட்டையிலிருந்து காலை 6:40 மணிக்கு புறப்பட்டு காலை 8:50 மணிக்கு நெல்லை ரயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரயில்கள் நெல்லை டவுன், பேட்டை, சேரன்மாதேவி, காரைக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி போன்ற ரயில் நிலையங்களில் நின்று புறப்படும். ரயிலில் 14 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.

Categories

Tech |