முல்லை பெரியாற்றில் பாசனத்திற்காக பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம், போடி தாலுகாவில் இருக்கும் கோம்பை, பண்ணைபுரம், தேவாரம், சிந்தலைசேரி, சங்கராபுரம், கோடாங்கிபட்டி, பொட்டிபுரம் ஆகிய பகுதிகள் பாசன வசதி பெரும் வகையில் முல்லைப் பெரியாற்றில் பதினெட்டாம் கால்வாய் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் பாசனத்திற்காக பதினெட்டாம் கால்வாயில் இருந்து தண்ணீரை திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து இன்று பதினெட்டாம் கால்வாயில் தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று மதகை இயக்கி பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். 30 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.