வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து விவசாயத்திற்காக பாசன கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு மறுகால் மதகுகள் மூடப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் வெள்ளபெருக்கு தற்போது குறைந்துள்ளது. இந்நிலையில் திற்பரப்பு அணையில் குளிப்பதற்கு சில நாட்களுக்கு பிறகு அனுமதித்துள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து உற்சாகத்துடன் குளித்து செல்கின்றனர்.