பாசன வசதிக்காக கோவிலாறு அணையில் இருந்து வருகின்ற ஐந்தாம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு ஆகிய அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, அந்தந்த பகுதிகளில் கோவிலாறு அணையில் இருந்து நவம்பர் 5 ஆம் தேதி முதல் அடுத்த வருடம் பிப்ரவரி 28ஆம் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
அதனால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களும் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாய பெருமக்கள் அனைவரும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.