Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பாசப்போராட்டம்” மகளின் மரணம்…. தந்தை எடுத்த முடிவு… தஞ்சையில் சோகம்

மகளின் இறப்பை தாங்க இயலாத தந்தை விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்தவர் இளங்கோவன் (50). இவர் விவசாயம் செய்து வந்தார் . கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கோவனின் மகள் இறந்துவிட்டார். இதனால் இளங்கோவன் மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார். தன்னுடைய மகளின் பிரிவை தாங்கிக்கொள்ள இயலாமல் இளங்கோவன்  விவசாயத்திற்காக வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு மயங்கி உள்ளார்.

மயக்கத்தில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால்  அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இளங்கோவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |