இன்றைய காலகட்டத்தில் சாமியார் என்ற பெயரில் பலரும் பல மோசடிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக பெண்களை பக்தி என்ற பெயரில் சீரழித்து வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இது போன்றவர்களை காவல்துறையும் கைது செய்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கானாவில் ஆசிரமம் நடத்தி வந்த சாய் விஸ்வ சைதன்யா என்னும் சாமியார் தீர்க்கதரிசனம் என்ற பெயரில் வசதியான பக்தர்களை ஈர்த்து பணம் பறித்துள்ளார். அதுமட்டுமன்றி பலரையும் வசியப்படுத்தி பாலியல் உறவு வைத்துள்ளார்.
இவர் டிவி, யூடியுப் சேனல்களில் ஆன்மீக நிகழ்ச்சி நடத்தி பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டால் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும் என்று கூறி பல பெண்களை சீரழித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது அந்த போலி சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.