பாசுந்தி செய்ய தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 1 கப்
பால் – 1/2 லிட்டர்
கண்டென்ஸ்டு மில்க் – 1/2 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
பாதாம் – சிறிதளவு
முந்திரி -சிறிதளவு
பிஸ்தா – சிறிதளவு
உலர் திராட்சை – சிறிதளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை – 8 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ – 1 சிட்டிகை
வெதுவெதுப்பான பால் – 1/4 கப்
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் 5 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் அதனை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்து, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து தனியாக வைக்கவும். அதே நேரம் வெதுவெதுப்பான பாலுடன் குங்குமப்பூவை சேர்த்து ஊற வைக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர், அரைத்து வைத்துள்ள அரிசி மாவையும் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வேக வைத்து எடுக்கவும்.
பின்பு அதில் 1/2 லிட்டர் பால் மற்றும் நெய் ஊற்றி நன்கு கிளறி விடவும். அரிசி நன்கு வெந்ததும், அதனுடன் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறவும்.
அதனை தொடர்ந்து, கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி, கலவையானது நன்கு கெட்டியாக வந்ததும், அதனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் வெதுவெதுப்பான பால் ஊற்றி 2 நிமிடம் கிளறி இறக்கவும்.
இறுதியில் ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதனை இறக்கி வைத்துள்ள கலவையின் மேல் சேர்த்தால் சுவையான பாசுந்தி ரெடி.