தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி 15 மாதங்களாக ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆட்சி தொடக்கத்தில் நல்ல பெயர் தற்போது இல்லை என்று அரசியல் விமர்சனங்கள் கூறுகின்றன. ஏனென்றால் பாஜக முன்வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளில் பின்வாங்கியது. சமூகத்தையை சட்டம், ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதை பொருட்கள் பழக்கம், மின் கட்டண உயர்வு என சர்ச்சைகளுக்கு பஞ்சம்யின்றி சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து ரெய்டு நடைபெற்று வருகிறது. நேற்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது தான் தமிழக அரசியளில் பேசுப் பொருளாக மாறி வருகிறது. இதில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையின் கீழ் வருகிறது. தற்போது இதன் டிஜிபியாக இருப்பவர் பி.கந்தசாமி ஐபிஎஸ். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை வெளிக்கொண்டு வந்து சம்பந்தப்பட்ட பெரும்புள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.
அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியல் தொடர்பான பல்வேறு ஆதாரங்கள் இருப்பினும் அவற்றின் அடிப்படையில் திமுக எந்தெந்த சமயங்களில் ரெய்டு நடத்தியது? அதன் பிறகு கைது, வழக்கு, விசாரணை என களம் தீவிரமடைந்ததா? என்பதுதான் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த விஷயத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்களா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அரசின் 15 மாத கால ஆட்சியில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஒருவர் கூட ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை. அப்படி என்றால் அச்சுறுத்தும் அரசியலாக ரெய்டு நடவடிக்கைகளை திமுக அரசு கையாளுகிறதா? என்ற கேள்விக்கு அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கப்படுகிறது. அதனை போல மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களை திசைதிருப்பதற்காக கையில் எடுப்பதாக குற்றம் சாட்டப்படுவது. அதுவும் புதிதாக ஏதேனும் சட்டங்கள், சட்ட திருத்தங்கள் திட்டங்கள் தேசிய அளவில் அமல்படுத்தும் போது சர்ச்சை வெடிக்காமல் இருக்க ரெய்டு விஷயங்களை செயல்படுத்தி வருவதாக சொல்லப்படும்.
அதே பாணியில் திமுக அரசு செய்கிறது. அப்படி என்றால் பாஜக அரசுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம். தமிழகத்தில் மின் கட்டண உயர்வு என்பது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தி இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இத்தகைய சலசலப்புகளை திசை திருப்பவே எஸ்.பி. வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் மீதான ரெய்டு நடவடிக்கையா? ஏன்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இத்தகைய விஷயங்களை எஸ்பி வேலுமணியும் முன்வைத்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், என் மீது மூன்றாவது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியுள்ளது. இதற்கு அரசியல் காழ்புணர்ச்சி தான் காரணம். தொடர்ந்து காவல்துறையே தவறான முறையில் திமுக பயன்படுத்துகிறது. மின்சார கட்டண உயர்வை திசை திருப்பவே சோதனை நடைபெற்றது. ஸ்டாலின் என்னை மிரட்டி பார்க்க நினைத்தால் முடியாது. திமுக ஆட்சியில் லஞ்ச தலை விரித்து ஆடுகிறது. ஆட்சிக்கு வந்த ஒன்றறை ஆண்டுகளில் அமைச்சர்களை துன்புறுத்தி ரூ.5,000 கோடிக்கு மேல் ஸ்டாலின் குடும்ப வாங்கி உள்ளது என்று குற்றம் சாட்டி இருப்பது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.