தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போராடி தோல்வியடைந்த கமலஹாசன் வருத்தத்துடன் வெளியேறிய காட்சி வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்கிறது. இந்நிலையில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் பாஜகவில் வானதி சீனிவாசன் இருவருக்குமிடையே கோவை தெற்கு தொகுதியில் கடும்போட்டி நிலவி வந்தது.
தோல்வியடைந்த கமலஹாசன்!! … வேதனையுடன் வெளியேறிய காட்சி !!#KamalHaasan #kamalhassan #Kamal #Kamal_For_KovaiSouth #kamalhaasanMLA #kamalahasan #MakkalNeedhiMaiam #MNM pic.twitter.com/zjoQufFbY2
— Mount Next (@mountnextindia) May 2, 2021
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் கமல்ஹாசன் மற்றும் வானதி சீனிவாசன் இருவரும் அருகருகே அமர்ந்து முடிவுக்காக காத்திருந்தனர். இருவருக்கும் இடையே குறைவான வாக்கு வித்தியாசம் இருந்துகொண்டிருந்த நிலையில், சுமார் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
செய்தியை அறிந்தவுடன் கமல்ஹாசன், அவரது கட்சி நிர்வாகிகளுடன் வருத்தத்துடன் அங்கிருந்து வெளியேறிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.