Categories
தேசிய செய்திகள்

“பாஜகவின் இணைந்த 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்” கடவுள் வந்து இணைய சொன்னதாக முன்னாள் முதல்வர் பேட்டி….!!!!

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் முதல் மந்திரி பிரமோத் சாவந்தை நேற்று சந்தித்து பேசினார். அவர்களுடன் சேர்ந்து முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் ரோபோ ஆகியோரும் முதல்வரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு காங்கிரஸ் சட்டசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு மைக்கேல் லோபா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் நாங்கள் பாஜக கட்சியில் இணைந்து முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தலைமையிலான ஆட்சியை வலுப்படுத்த போகிறோம் என்றார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைத்து முக்கிய தலைவர்களும் இனி வருகிற நாட்களில் கட்சியை விட்டு வெளியேறுவார்கள்.

ஏனென்றால் அவர்களுக்கு இடையே பெரிய அளவில் வேற்றுமை காணப்படுகிறது. நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் என்பதால் மக்களின் குரலை கண்டிப்பாக கேட்க வேண்டும். பொதுமக்கள் எங்களிடம் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைய வேண்டும் என்று கூறினார்கள். கோவா மக்கள் என்னிடம் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை வெற்றி பெறப் போவதில்லை என்று கூறினார்கள். ஏனெனில் காங்கிரஸ் கட்சியின் உயர் மட்டத்தில் உள்ள தலைவர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொள்வதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர் என்றார். அதன்பிறகு முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் கூறியதாவது, நான் ஒரு கோவிலுக்கு சென்றேன். அங்கிருந்த ஆண் மற்றும் பெண் தெய்வங்களிடம் என்னுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிவித்தேன்.

அதற்கு கடவுள் என்னிடம் நீ உன் வழியில் செல்வதை நினைத்தும் கவலைப்படாதே என்று கூறினார் என்றார். அதாவது பாஜகவில் சேரும்படி கடவுள்தான் தன்னிடம் கூறியதாக முன்னாள் முதல்வர் கூறியுள்ளார். இந்நிலையில் 40 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டசபையில் 10 உறுப்பினர்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்கள். இதில் 8 எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு விலகியது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அடியாக விழுந்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்  குலாம் நபி ஆசாத் உட்பட பல்வேறு நபர்கள் கட்சியை விட்டு விலகி வரும் நிலையில் தற்போது 8 எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |