தமிழக முதல்வர் பழனிசாமி பாஜக தலைவர் ஜேபி நட்டா சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் பாஜக 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் 60 தொகுதிகளை கேட்டு பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், அதிமுகவோ இறுதியாக 34 தொகுதிகளை ஒதுக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. பாஜகவின் கோரிக்கையை அதிமுக ஏற்க மறுத்ததால் ஜேபி நட்டா தமிழக முதல்வர் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக கூறப்படுகிறது.