பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் சையது இப்ராஹிமுக்கு சென்னை ஹைகோர்ட் ரூ.10,000 அபராதம் விதித்துள்ளது. அதாவது கோவை 95-வது வார்டில் வேலூர் சையது இப்ராஹிமுக்கு தேர்தல் பரப்புரை செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனுவில் வழக்கு விவரங்களை தெரிவிக்காததற்காக கண்டனம் தெரிவித்தார். மேலும் அவருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.