பாஜக மாநில தலைவராக இருப்பவர் அண்ணாமலை. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை வருகைக்கு பிறகு தமிழக அரசியலில் பாஜக செல்வாக்கு அதிகரித்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. ஒழுங்காக போன இடத்தில திடீரென ஓட்டை விழுந்தது போல மதுரைக்கு வந்த பிடி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்ட விவகாரம் பாஜகவை ரொம்பவே டேமேஜ் ஆகிவிட்டது. அதிலும் செருப்பு வீசப்பட்ட விவகாரம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனைப்படி முன்கூட்டியே திட்டமிட்டதை அம்பலப்படுத்தும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கட்சியின் மானத்தை கப்பல் ஏற்றியது. இதனால் தமிழகம் முழுவதும் பாஜக மீது கடுமையான அதிருப்தியும், கண்டன குரலும் இழந்தபடியே உள்ளதால் காட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில் அமைச்சர் காரின் மீது வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து மதுரை பாஜக மாவட்ட தலைவர் சரவணன் கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததது தொண்டர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டதாகவே கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள இந்த சோதனையான நேரத்தில் மேலும் கட்சிகள் ஷாக் கொடுக்கக்கூடிய வகையில் முக்கிய நிர்வாகிகள் வெளியேறி மாற்று கட்சிகளில் சேர முடிவெடுத்துள்ளதாக கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த பாஜக தலைவர் கட்சியை விட்டு கிளம்பும் முடிவில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் காட்சியை விளம்பரப்படுத்த தாறுமாறாக செலவு செய்ய சொல்லி பாஜக மேலிடம் உத்தர போடுவதாகவும், சித்தாந்த வீதியில் ஒத்து போனாலும் போதிய வசதி இல்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாஜகவினர் கூறியது, இது தேசிய கட்சி என்பது பெயரளவுக்கு தான். மற்றபடி எல்லா செலவும் நிர்வாகிகள் சொந்த செலவில் தான் செய்ய வேண்டும். பாஜக மேலிடம் ஒதுக்கும் நிதி எங்கே போவதுன்னே தெரியல. இது இப்படியே நீடித்தால் சிந்தாந்த்துடன் ஒத்துப்போகும் பல முக்கிய நிர்வாகிகளையும் கட்சி இலக்கும் நிலை வரலாம். மேலும் சித்தாந்தம் மட்டும் இருந்தால் போதாது பணமும் கையில் இருக்க வேண்டும் என்பதே எங்கள் கட்சியில் நிலவும் உண்மையான சூழல் என்று கூறுகின்றனர்.