Categories
தேசிய செய்திகள்

பாஜகவிற்கு தக்க பதிலடி…. உருவானது காங்கிரஸ் அலை…. வெற்றிக்கான அறிகுறிகள்….!!!!

கர்நாடகாவில் கடந்த 3 ஆண்டுகளாக தள்ளிப் போய்க்கொண்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் கடந்த திங்கள்கிழமை அன்று நடந்து முடிந்தது. தேர்வு முடிவுகளின்படி 20 நகர்ப்புற உள்ளாட்சிகளில் பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது. பாஜகவிற்கு 15 உள்ளாட்சிகளில் பெரும்பான்மை கிடைத்துள்ளது. மீதி உள்ள உள்ளாட்சிகளில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 1,184 வார்டுகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் 501 இடங்களிலும், ஆளும் பாஜக 433 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 45 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 205 இடங்களில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

பங்காபூர் நகராட்சி கவுன்சிலை காங்கிரஸ் தக்கவைத்துக்கொண்டது. முதல்வர் பசவராஜ் பொம்மையின் தொகுதிக்குட்பட்ட குட்டல் மற்றும் நாயகனஹட்டி நகராட்சியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கடக் பெட்கேரி நகராட்சி கவுன்சிலை பாஜக தக்கவைத்துக்கொண்டது. இங்குள்ள 35 வார்டுகளில் பாஜக 18, காங்கிரஸ் 15, சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்று உள்ளனர். இதேபோன்று தக்ஷின கன்னடா மாவட்டத்தின் நகரின் 17 வார்டுகளில் 11 பாஜக , 4 – ல் காங்கிரஸ், சுயேச்சை 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதுபற்றி பேசிய முதல்வர் பசவராஜ் பொம்மை, கடந்த முறையை விட தற்போது சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளோம். சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் உள்ள பகுதிகளில் கிடைக்காத வெற்றியை சாத்தியமாகி காட்டியிருக்கிறோம். எங்களின் வளர்ச்சிப் பணிகள் தொடரும். எஞ்சிய பகுதி மக்களின் வாக்குகளையும் பெறுவோம் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே சிவகுமார் பேசுகையில், சமீபகால தேர்தல் முடிவுகள் கர்நாடகாவில் காங்கிரஸ் அலை உருவாகியிருப்பதை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |