Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட நுபுர் ஷர்மாவுக்கு கருத்து சொல்ல உரிமை இருக்கின்றது”…. ஆதரவு தெரிவித்த நடிகை கங்கனா ரனாவத்….!!!!!

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மாவுக்கு கங்கனா ரனாவத் ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் பாஜக தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நிலையில் முகமது நபி பற்றி அவதூறாக கருத்து கூறியதாக புகார் எழுந்தது. மேலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து பாஜகவிலிருந்து இருவரும் தற்காலிகமாக நீக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் இன்ஸ்டாவில் கூறியுள்ளதாவது, “அவர் கருத்துக்களை சொல்ல உரிமை உள்ளது. அவருக்கு எத்தனை மிரட்டல்கள் வருகின்றது என்பதை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.

நீங்கள் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தால் கோர்ட்டுக்கு செல்லுங்கள். இந்து கடவுள்கள் அவமதிப்புபடுவதற்காக நாங்கள்  நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கின்றோம். நீங்களும் அப்படியே செய்யுங்கள். இது ஒன்றும் ஆப்கானிஸ்தான் இல்லை. இங்கு ஜனநாயக ஆட்சிதான் நிலவுகின்றது. அதை மறந்துவிட்டு பேசுபவர்களுக்கு இப்போது நினைவு படுத்துகிறேன்” என கூறியுள்ளார்.

Categories

Tech |