தமிழக பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிப்பதாக கூறி ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
அதனைப் போலவே கட்சியிலிருந்து திருச்சி சூர்யா,பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர் வேலு உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்னும் பலரை நீக்க அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தனக்கு வேண்டிய நபர்களை மட்டும் சௌமியா தினேஷ், கே ஜி சுரேஷ்குமார் மற்றும் வினோத்குமார் ஆகியோரை மாநில அமைப்பு பொதுச்செயலாளர்களாக அண்ணாமலை நியமித்துள்ளார்.