நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்து வருபவர் நடிகை குஷ்பு.இவர் சில காலமாக காங்கிரஸ் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் விளகியிருந்தார்.மேலும் காங்கிரஸ் தலைமை தன்னை ஒதுக்கி வைப்பதாகவும் வருத்தம் தெரிவித்தார்.இதையொட்டி குஷ்புவின் பிறந்தநாளுக்கு பாஜகவின் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.இது குஷ்புவை பாஜகவில் இணைப்பதற்கான தந்திரமா என கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
ஆனால் இவற்றையெல்லாம் மறுத்த குஷ்பு நான் பாஜகவில் இணைய போவது இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அறப்போராட்டத்திலும் கலந்து கொண்டார்.இதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் தனது நிலைத்தன்மையை உறுதி செய்தார்.ஆனால் தற்போது நடிகை குஷ்பு பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்காக அவர் டெல்லி புறப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.