எங்கள் கூட்டணியில் உள்ள பாஜகவில் குஷ்பு இணைந்துள்ளது எங்களுக்கு பலம்தான் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. மழை நீரை சேமிப்பதற்கு நீர்நிலைகள் அனைத்தும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பருவ மழையை எதிர் கொள்வதற்கு மண்டல அளவில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கை கட்சியின் பொக்கிஷம். அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஈர்க்கும்.
எங்களின் கூட்டணியில் உள்ள பாஜகவில் குஷ்பு இணைந்துள்ளது எங்களுக்கு பலம் தான். மேலும் துணைவேந்தர் சூரப்பா ஜனநாயக ரீதியில் மரபு சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும். உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் வளர்ச்சியைப் பெற வேண்டும்”என்று அவர் கூறியுள்ளார்.