டெல்லியின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
கர்நாடகாவின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழகத்தை சேர்ந்தவர். அவர் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்ற அந்தஸ்தில் இருந்த போது, தனது கடும் நடவடிக்கைகளால் பெரும்புகழ் பெற்றவர். அதுமட்டுமன்றி அவர், பெங்களூர் தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அவர் தனது சொந்த மாநிலமான தமிழகத்தில், அரசியலில் சேர உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் டெல்லியின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, தமிழக பாஜக தலைவர் முருகன் மற்றும் பொறுப்பாளர் முரளிதரராவ் ஆகியோர் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கு என்னால் முயன்ற முயற்சிகளை கட்டாயம் செய்வேன். பதவியை எதிர்பார்த்து இந்த கட்சியில் நான் சேரவில்லை. சாதாரண தொண்டனாகவே வந்திருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.