Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

பாஜகவில் இணையும் ”லேடி சூப்பர் ஸ்டார்”…. அடி தூள் …!!

நடிகை விஜயசாந்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியில் இரண்டாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து பல பிரபலங்கள் பாஜகவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் நடிகர் – நடிகைகள் பாஜகவில் இணைந்து வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் விஜய சாந்தி இன்று பாஜகவில் இணைய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாஜகவில் இருந்த அவர் டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு சென்றார். காங்கிரஸ் கட்சியில் அவர், தனக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்பதாகக் கூறி மீண்டும் பாஜகவில் இணைய உள்ளார். விஜய் சாந்தி சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அதிக படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |