அதிமுகவை மீண்டும் கைப்பற்ற சசிகலா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதிமுகவின் அவரை இணைத்துக் கொள்ள வேண்டுமென்று ஓபிஎஸ் விருப்ப படுவதாகவும்,அதற்கு இபிஎஸ் முட்டுக்கட்டை போடுவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சசிகலா பாஜகவில் இணைந்தார் வரவேற்போம் என்று சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளவில்லை எனும் பட்சத்தில், ஒருவேளை அவர் பாஜகவில் இணைய விரும்பினால் நாங்கள் அவரை வரவேற்போம். அது பாஜக வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். கட்சிக்கு உறு துணையாகவும் இருக்கும். இதற்கான முயற்சிகளை பாஜக எடுக்கும் என்று அவர் கூறியுள்ளார். அவர் கூறியுள்ள இந்த கருத்து அரசியலில் புதிய பரபரப்பு கிளப்பியுள்ளது.