பிரபல தமிழ் நடிகர் அர்ஜுன் விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து சென்ற பாஜகவின் முக்கிய பிரபலங்கள் அனைவரும் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இதனையடுத்து நடிகர் அர்ஜுன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அர்ஜுன் சென்னை விருகம்பாக்கத்தில் அம்மன் கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கோவில் கட்டும் பணியை நேரில் சென்று பார்த்த தமிழக பாஜக தலைவர் முருகன், அர்ஜுனை பாஜகவில் இணைய அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடந்ததாகவும், விரைவில் தேசிய தலைவர் ஒருவரின் தலைமையில் அர்ஜுன் இணைவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.