கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அகில இந்திய தேசிய தலைவர் ஜே.பி நாட்டா நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். அந்த வகையில் முதன்முறையாக கோவை மற்றும் நீலகிரியில் இருந்து தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். தமிழகத்திலிருந்து நடைப்பயணத்தை தொடங்க வேண்டும் என்பதற்காகத்தான் ஜே.பி நட்டா கோவை மற்றும் நீலகிரியில் தன்னுடைய பயணத்தை தொடங்கியுள்ளார். மேலும் ஜேபி நட்டாவின் சுற்றுப்பயணம் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
அதன் பிறகு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சி வெற்றி பற்றி 25 எம்பிக்களுடன் நாடாளுமன்றம் செல்வோம் என்றும் கூறியுள்ளார். பொங்கல் பரிசில் திமுக அரசு கரும்பு தருவதற்கு கூட தயாராக இல்லை. திமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி என்பது மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் நிச்சயமாக நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் 25 எம்பிக்கள் வெற்றி பெறுவது உறுதி என்றும் கூறியுள்ளார்.