Categories
மாநில செய்திகள்

பாஜகவுக்கு ஆதரவாக பேசிய அதிமுக மாஜி…. என்ன இப்படி பண்ணிட்டாரே!….. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!!

தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியது, மின்கட்டணத்தை உயர்த்துவது ஆகியவற்றை கண்டிக்கும் வகையில் நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் பாஜவினர் ஆர்பாட்டம் நடத்தினர். அதன்படி விருதுநகர் மாவட்டம் காரியாபட்டில் அதிமுக கிழக்கு மாவட்ட சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் பாஜக வளர்வது எங்களுக்கு மகிழ்ச்சியே. பாஜக எங்களின் தோழமைக் கட்சி. அவர்கள் செயல்பாடு நன்றாக உள்ளது. தோழமைக் கட்சி வளர்வது எங்களுக்கு மகிழ்ச்சியே. அதைப்பற்றி எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து அதிமுகவின் ஒற்றை தலைமையின் பலம் டெல்லி வரை தெரிந்துள்ளது. சென்னை வரும் பிரதமர் தோழமை கட்சி தலைவர் என்ற முறையில் இபிஎஸ், ஓபிஎஸ்ஐ சந்திப்பது அவரின் உரிமை. அதில் நல்லது நடக்கும் என்று நம்புகிறேன். மேலும் அதிமுகவை பொருத்தவரை ஜெயலலிதா இருந்தபோது தனித்து நின்று 136 இடங்களை வென்று ஆட்சி அமைத்தார்களோ, அதனைப் போல எங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம் என்று அவர் கூறினார். இதனையடுத்து தமிழ்நாட்டில் நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று கூறி அதிமுகவே டேமஜ் செய்து வரும் பாஜகவை இவர் எப்படி வெளிப்படையாக வரவேற்று பேசி இருக்கிறார் என்று அதிமுக மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது

Categories

Tech |