நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இலங்கையை வாட்டி வரும் பொருளாதார நெருக்கடி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியும், அன்றாடப் பயன்பாட்டிற்கு தேவைப்படும் பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. நாட்டு மக்களின் துயரம் துடைக்காத சிங்கள அரசாங்கத்தை கடுமையாக கண்டிக்கிறேன். நாட்டு மக்களை பற்றி எந்த கவலையும் இல்லாமல் தமிழக மக்களை எவ்வாறு துன்புறுத்துவது, எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுவது என சிந்தனை செய்து வரும் சிங்கள அரசாங்கம் ஒருபோதும் திருந்தாது. பாவம் இதற்காக நாட்டு மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். கொஞ்சம் கூட பொறுப்பில்லாத சிங்கள அரசாங்கத்தால் அந்நாட்டு மக்கள் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர்.
நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் இனவெறியில் கவனம் செலுத்தும் ஒரு அரசாங்கம் எந்த வகையிலும் நல்ல அரசாக இருக்க முடியாது . உலக நாடுகளுக்கெல்லாம் கடனாளியாக இருக்கும் மெக்சிகோவின் கொடிய நிலை தற்போது இலங்கைக்கும் வரலாம். நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் வரை மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்களை துன்புறுத்தி வரும் சீன அரசுக்கு இந்தியா கடன் உதவி வழங்குவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். சீனாவுடன் உறவு கொண்டுள்ள இலங்கை இந்தியாவுக்கு எதிராக கூட்டுச்சதி செய்ய வாய்ப்பு உள்ளது. இதனை எதிர்க்காமல் மாறாக அதற்கு கடனுதவி வழங்கி வரும் ஆளும் பாஜக அரசுக்கு என்னுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.