Categories
தேசிய செய்திகள்

“பாஜகவுக்கு எதிராக போராடுவோம்”… ஸ்டாலின் மற்றும் சோனியாவுக்கு மம்தா பேனர்ஜி கடிதம்..!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பாஜக அல்லாத தலைவர்களுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் பாரதிய ஜனதா அரசால் கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் மம்தா பானர்ஜி. மேலும் டெல்லி முதல்வரை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இன்று டெல்லி அரசின் அதிகாரத்தை பறித்த பாஜக அரசு நாளை பிற மாநிலங்களின் அதிகாரத்தையும் பறிக்கக்கூடும் என்று மம்தா அந்த கடிதத்தி்ல் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பிரச்சனைகளை உருவாக்குகிறது பாஜக என்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில ஆளுநர்கள் பாஜகவின் தொண்டர்களை போல் செயல்படுகின்றனர் என்றும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மூலம் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட தலைவர்களை மத்திய அரசு குறிவைக்கிறது எனவும் தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக அல்லாத மற்ற கட்சியினரை மட்டும் குறிவைத்து மத்திய அரசு சிபிஐ அமலாக்கத்துறை மூலம் வருமானவரி சோதனைகளை நடத்துகிறது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |