Categories
அரசியல்

“பாஜகவுக்கு ஜால்ரா போடும் பழனிச்சாமி…!!” விளாசிய தமிழக முதல்வர்…!!

தமிழகம் முழுவதும் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தஞ்சாவூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் பேசியதாவது, “சோழர்களின் ஆட்சி தலைநகரமாக விளங்கியது தஞ்சை. நெற்களஞ்சியம் எனப் பெயர் பெற்றது தஞ்சை. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இருந்த காவேரி பிரச்சனையை தீர்த்து வைத்தது திமுக தான். காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் வாதிட்டு அதனை அமைக்க வைத்தது திராவிட முன்னேற்ற கழகம் தான். ஒன்றிய ஒன்றிய அரசுக்கு இதில் உடன்பாடு இல்லாத பட்சத்திலும் கூட மாநில அரசின் தீவிர வற்புறுத்தல் காரணமாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது . பாஜக அரசுக்கு ஜால்ரா போடும் பழனிசாமி இதுவரை பாஜகவால் கொண்டுவரப்பட்ட தேவையற்ற திட்டங்கள் எதையும் எதிர்க்கவில்லை.

தமிழக மக்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்தியாவிலுள்ள விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய 3 வேளாண் சட்டங்களை பாஜக அரசுதான் கொண்டு வந்தது. அந்த பாஜகவிற்கு பாதம் தாங்கி நின்ற அவர் நமது பழனிச்சாமி பாஜகவிற்கு ஒன்று என்றால் ஓடோடி வந்து நிற்பார் பழனிச்சாமி. அவரை பாஜக பழனிசாமி என்றுதான் அழைக்க வேண்டும். அந்த அளவிற்கு பாஜகவிற்கு வாய்ஸ் கொடுப்பவர் பழனிச்சாமி. ஒரு வருடமாகப் போராடிய விவசாயிகளை தரகர்கள் என்று கொச்சை கொச்சை படுத்தியது பாஜக அரசு எல்லாம் தெரிந்திருந்தும் தற்போது வரை பாஜகவிற்கு பாதம் தாங்கி நிற்கும் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். !” என அவர் கூறினார்.

Categories

Tech |