Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுக்கு தொடர்பு இருக்கு…! அன்னைக்கே நாங்க சொன்னோம்… இப்போ நிரூபணம் ஆகிட்டு… விசிக தலைவர் குற்றசாட்டு …!!

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கும் தொடர்பு உள்ளது என மக்களவை உறுப்பினர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திருமாவளவன், இதற்கு முதல்வர் எடப்பாடி அவர்கள் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும். உண்மையிலேயே இவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென அக்கரை இருக்குமேயானால் இதை தெளிவுபடுத்த வேண்டியது அவருடைய பொறுப்பு.

ஆளுநர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்  என்கிற பொழுது மத்திய அரசிற்கும் தொடர்பு இருக்கிறது. மத்திய அரசு இதில் நாடகமாடி இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள்  குற்றம் சாட்டுகின்றோம்.மத்திய அரசும், ஆளுநரும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசுக்கு இவர்களை விடுவிக்க உடன்பாடு இல்லை.

ஆகவே இதை தள்ளிப்போட வேண்டும். மேலும் பல மாதங்கள் இழுத்தடிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு  இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும். ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்கிற கருத்தை தமிழகத்தில் சிலர் ஏற்படுத்தினார்கள். காங்கிரஸ்தான் தமிழ் சமூகத்திற்கு எதிராக இருக்கிறது பிஜேபி அப்படி இல்லை என்கிற தோற்றத்தை உருவாக்கினார்கள்.

அப்பொழுதே விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் சொன்னோம். பாரதிய  ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்கள் விவகாரத்தில், ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டைத் தான் எடுக்கும். அவர்கள் எதிராகத்தான் இருப்பார்கள். இந்திய அரசு சிங்களர்களை, சிங்கிளாக அரசை  ஒருபொழுதும் பகைத்துக் கொள்ளாது. தமிழர்களை பகைத்தாலும், தமிழர்களை அழித்தாலும் சிங்களவர்களை பகைத்துக் கொள்ளாது, சிங்களவர்களோடு முரண்படாது. இதுதான் இந்திய அரசின் வெளிவிவகார கொள்கை என்பதை சுட்டி காட்டி இருக்கிறோம். அது இன்றைக்கு நிரூபணம் ஆகியிருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |