தமிழகத்தில் வரும் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேசிய அளவில் பல தலைவர்களும் தமிழகத்தில் முகாமிட்ட வண்ணம் இருக்கிறார்கள். தொடர்ச்சியாக பல்வேறு இடங்களுக்கும் சென்று மக்களோடு கலந்துரையாடி அவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி கட்சி சார்பில் ராகுல் காந்தி கடந்த சில வாரங்களாகவே தமிழகத்திற்கு வந்த வண்ணம் இருந்தார்.
கடந்த சில நாட்களாக தென்மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் அவர் நேரடியாக சென்று மக்களோடு கலந்து உரையாடி பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அதுபோன்ற பரப்புரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்துக்கு பாஜக தலைவர் எல்.முருகன் கடிதம் எழுதியிருக்கிறது.=
அதுமட்டுமல்லாமல் ராகுல் காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு எழுதப்பட்டிருக்கும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பதிவில், தமிழகத்தில் பாஜகவுக்கு விழுகின்ற 10 – 20 வாக்குகளை காப்பற்ற தமிழக பாஜக தலைவர் முருகன் இறுதி கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என கிண்டல் அடித்துள்ளது.
தமிழகத்தில் பாஜகவுக்கு விழுகின்ற 10 – 20 வாக்குகளை காப்பற்ற தமிழக பாஜக தலைவர் முருகன் இறுதி கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளார்…… pic.twitter.com/u9x6fLVDlq
— TN Congress IT & Social Media Department (@TNCCITSMDept) March 4, 2021