Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுடன் கூட்டணி எப்படி இருக்கு ? அமைச்சர் பதில் …!!

தமிழகத்தில் சிலைகள் சேதபடுத்துவதில் காவி தொடர்புடையதாக உள்ளது எனவே உங்களுக்கும் பாஜகவுக்கும் உள்ள கூட்டணி எப்படி இருக்கின்றது என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது…. எங்களுக்கு எந்த கலரும் முக்கியம் இல்லை…  யார் தப்பு செய்தாலும் தப்பு தன…  தப்பு பண்ணுனா குண்டாஸ் தான்…  தமிழ்நாட்டை பொருத்தவரை இங்கு இடம் கிடையாது….  இங்க  பெரியார், அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,  அம்மா தான்.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். எங்க கொள்கையை நாங்கள் சொல்லிவிட்டோம்.  இந்த மண்ணை பொறுத்தவரை… இது அமைதியான மண். தமிழ் மண்ணில் ஒரு குறுகிய எண்ணத்தை கொண்டவர்கள்… அது யாராக இருந்தாலும் சரி, குறுகிய எண்ணத்தோடு அரசியல் செய்தால் நிச்சயம் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு இருக்காது.

தமிழன் பரந்த மனப்பான்மை உள்ளவன், பரந்த எண்ணம் உள்ளவன், ஒரு விசாலமானவன், வந்தாரை எல்லாம் வாழ வைப்பவன் அப்படி இருக்கும்போது இந்த மண்ணுல… எல்லாரும் ஒன்றாக… சகோதரர்களாக இருக்கிற ஒரு சூழலில்…. அதை பிரித்து ஆள வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பா முடியாத விஷயம். இந்த மண்ணில்  ஜாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ, வேறு எந்த ஒரு விரும்பத்தகாத விஷயங்களை தமிழ்நாட்டு மக்கள் என்னைக்குமே இடம் கொடுக்க மாட்டாங்க. கொள்கை என்பது வேற…. கூட்டணி என்பது வேறு…. எங்களை பொருத்தவரை கூட்டணி வந்து இன்றைய நிலையில் தொடர்ந்துகொண்டிருக்கிறது…. எந்த பிரச்சனையும் இல்லை…

Categories

Tech |