அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து விவாதம் நடைபெற்று உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைக்க சிவி சண்முகம் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினர் வாக்கு அளிக்க மாட்டார்கள் என்றும்,
பாஜக உடன் கூட்டணி வைப்பதால் அதிமுகவிற்குத்தான் அதிக இழப்பு என்றும் சிவி சண்முகம் வெளிப்படையாகவும், ஆவேசமாகவும் பேசியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஒரு சில அதிமுக நிகழ்ச்சிகளிலும் பாஜக உடன் கூட்டணி வைக்கக்கூடாது என பேசி இருந்த சிவி சண்முகம் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தனது கருத்தை வெளிப்படையாக முன் வைத்திருக்கிறார்.
கடந்த காலங்களிலும் கூட அவர் பாஜக கூட்டணியில் அதிமுக தொடர வேண்டாம், திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது என்றெல்லாம் பேசியா நிலையில், எடப்பாடி பழனிசாமி கூட்டணி குறித்து நிர்வாகிகள் யாரும் இஷ்டத்துக்கு பேச வேண்டம் என கூறினார்.