பாஜகவுடன் சண்டை ஏற்பட்டு உள்ளதா ? என்பது குறித்து கேள்விக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் கொடுத்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்: “பிரதமர் சென்னைக்கு வந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் பிரதமரிடம் நூல் விலையை குறைக்கக்கோரி கோரிக்கை வைக்கவில்லை. வருமானம் வரக்கூடியவைகளுக்கு மட்டும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.
பொன்னையன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் பாஜக இடையே உறவு நல்ல முறையில் உள்ளது. எங்களுக்குள் எந்த உறுத்தலும் இல்லை. திமுக ஆட்சியில் நடந்த குற்றங்களை மறைக்கவே அதிமுக நிர்வாகிகள் மீது பொய் போடுகிறார்கள். அதிமுக ஆட்சியின் 100 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது” என்று திமுக அரசு மீது குற்றம் சாட்டியிருந்தார்.