Categories
மாநில செய்திகள்

பாஜகவுடன் திமுக இணைகிறதா?….. அமைச்சர் கூறிய பதில்….!!

தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஹலோ எப்.எம்.மில் இன்று காலை 10 மணிக்கு ஒளிபரப்பான ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இதிலிருந்து முதல்வர் ஸ்டாலின் மக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த 10 ஆண்டுகாலமாக அதிமுக ஆட்சியில் தவறான நடவடிக்கைகளால் மாநில அரசுகள் கடனில் உள்ளது என்றும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து அம்மா உணவகங்கள் இருந்து வரும் 500 இடங்களில் கலைஞர் உணவகம் திறக்கப்படுவது குறித்து பேசிய அவர், கடந்த ஆட்சியை போல காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளவில்லை என்றும், அம்மா உணவகம் தொடர்ந்து நடைபெறும். கடந்த அதிமுக ஆட்சியில் இந்த திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. அந்தந்த பகுதியில் உள்ள நகராட்சி நிர்வாகம் தான் அதை நடத்தி வந்தனர். எனவே விவரம் தெரியாமல் அதிமுக குற்றம் சாட்டுகின்றனர் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும் பாஜகவுடன் திமுக நெருங்குகிறதா என்ற கேள்விக்கு அவர் கூறிய பதில், மக்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசுடன் இணைந்து இருக்கிறோம். ஆனால் பாஜகவின் எல்லா திட்டங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே எதிர்க்கட்சிகள் என்றால் ஏதாவது சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் எல்லாவற்றுக்கும் பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறினார். மேலும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட பல கேள்விகளுக்கு அமைச்சர் காந்தி பதிலளித்துள்ளார்.

Categories

Tech |