Categories
அரசியல்

பாஜகவை ஆதரிக்கும் எடப்பாடி.. அழிய போகும் அதிமுக… உச்சகட்ட மோதலால் பரபரப்பு …!!

அதிமுக தலைமையில் உள்ள  எடப்பாடி பழனிசாமி மாறாவிட்டால் அதிமுக அழிந்து விடும் என புகழேந்தி விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி,  இன்றைய தினம் தந்தை பெரியார் நாளை சமூக நீதி நாளாகவும் நாவலருக்கு சிலையும் இப்படி பல நல்ல செய்திகளை இந்த அரசிடம் பார்க்க முடிகிறது. திராவிட இயக்க தலைவர்களின் பெயர்களான  தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அம்மா, கலைஞர் என்றெல்லாம் உச்சரிக்க முடிகிறது.

ஆகவே அந்த வியூகம் அப்படியே இருக்கட்டும். இந்த தலைமை மாறுகின்ற வரை இவர்கள் தேவையில்லை என்பதை அதிமுக தொண்டர்கள் உணர்ந்து விட்டார்கள். எந்த காலகட்டத்திலும் அதிமுக தொண்டர்கள் வேறு கட்சி கொடியை பிடிக்க வேண்டாம், யாருக்கும் ஏணியாக, அடிமைகளாக, தோணியாக நம் மீது சவாரி செய்வதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது.

அப்படி செய்வோமேயானால் அம்மாவிற்கும், புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும் செய்கின்ற துரோகமாக மாறிவிடும். எடப்பாடி பழனிசாமி தலைமை மாறுகின்ற வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டர்களும், நிர்வாகிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இல்லையேல் இந்த கட்சி முற்றிலுமாக அழிந்துவிடும். ஆகவே தான் அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு தேர்தல் வெற்றி வியூகம் அமையாதது ? அதிமுகவுக்கு  நன்றாக அமைந்து விட்டது. இல்லையென்றால் வட நாட்டு தலைவர்கள் படத்தோடு சுற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும், இதுதான் நான் யோசனை செய்து தெளிவு பெற்ற கருத்து என புகழேந்தி விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |