Categories
அரசியல்

“பாஜகவை எப்படி தோற்கடிப்பது என எனக்கு தெரியும்…!!!” ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு…!!

முதலமைச்சரின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வெளியிட்டார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது, “உங்களில் ஒருவன் என்ற அருமையான புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ளார். முதல்வராக பொறுப்பேற்றது முதலே பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். நாடாளுமன்றத்தில் அடிக்கடி தமிழகம் மற்றும் தமிழக மக்கள் பற்றி பேசி வந்தேன். இது குறித்து செய்தியாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு என்னையறியாமலேயே நானும் ஒரு தமிழன் தான் என்று கூறினேன். தமிழகத்திற்குள் நுழையும்போது ஒரு பணிவு தானாகவே என்னுள் வந்துவிடுகிறது.

ஏனென்றால் இந்த மண்ணில் என்னுடைய ரத்தம் கலந்திருக்கிறது. தமிழகத்தின் வரலாற்றை பேசாமல் இந்திய வரலாறு குறித்து யாராலும் கூற முடியாது. விருந்தோம்பலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள். தமிழகத்தின் குரலுக்கு மதிப்பு அளிக்கிறேன் என பிரதமர் மோடி கூறுகிறார். தமிழகத்தின் குரலை புரிந்துகொள்ளமுடியாத அவரால் எவ்வாறு தமிழகத்தின் குரலுக்கு மதிப்பு அளிக்க முடியும்.? நீட் விவகாரத்தை வைத்து அவரது முடிவு குறித்து நாம் அறியலாம் மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு பறித்து வருகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே ஆட்சி இந்த ஒரே கொள்கையால் நாடு சீரழிந்து வருவது பிரதமர் மோடிக்கு ஏன் புரியவில்லை என வியப்பாக இருக்கிறது. இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்திய மக்கள்தான் முடிவு செய்ய வேண்டுமே ஒழிய ஒரு தனிப்பட்ட கட்சி முடிவு செய்யக்கூடாது. நீங்கள் யார் இந்தியாவை முடிவு செய்வதற்கு..? இந்த பாஜக ஆட்சி வந்ததிலிருந்தே நீதித்துறை, காவல்துறை என அனைத்து துறைகளும் நசுக்கப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக கட்சி அரசியலின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இது இந்தியாவை மேலும் சீர்குலைக்கும் பாரம்பரியத்தை எதிர்த்து பாஜக போராடுகிறது இதில் அவர்களால் வெற்றி பெற முடியாது. அவர்கள் தோற்கடிக்கப்பட தான் செய்வார்கள்.!” அவர் கூறினார்.

Categories

Tech |