Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவை பாஜகவே எதிர்க்குறாங்க பா… காமெடியா இருக்கு… அண்ணாமலையை கலாய்த்த பிடிஆர்…!!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நிதியமைச்சர் பி டி ஆர் கலாய்த்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மத்திய அரசு அண்மையில் பெட்ரோல் மீதான கலால் வரி ரூபாய் 5-ம், டீசல் மீதான கலால் வரி ரூபாய் 10-ம் குறைத்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களை பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று கூறி மத்திய அரசு வலியுறுத்தி வந்தது. மத்திய அரசின் இந்த  அறிவிப்பை ஏற்று 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தன. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டுமே குறைத்தன. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் வாட் வரியை குறைக்க வில்லை.

இதனிடையே தமிழகத்திலும் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்காததால் நேற்று முதல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திவரும் அண்ணாமலையை தமிழ்நாடு நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கலாய்த்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து அவர் “என்னது, விலை உயர்வை கண்டித்து போராட்டமா? ஆனால், அதற்கு முழு காரணம் வரி உயர்வு தானே? அதுவும், அனைத்து வரி உயர்வையும் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சி அதிமுகவும் தானே செய்தன. அப்போது,ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் சொந்தக் கட்சியின் தேசியத் தலைமையையும், கூட்டாளிகளையும் கண்டிக்குறாரோ? ” என அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |