தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாத முதல் சட்டமன்ற தேர்த என்பதால் அனைவராலும் எதிர்பார்க்கப்டுகின்றது. இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி அதிமுக, பாமக, தேமுதிக, தாமாக கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, மோகன்ராஜ் உள்ளிட்ட 5 பேர், பாமக சார்பில் ஜி.கே மணி, ஏ.கே மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகள் பங்கேற்பதால் தேர்தல் கூட்டணி இறுதியாக வாய்ப்புள்ளது. நிகழ்ச்சிகு பின் மோடியுடன் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கூட்டணி குறித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.