Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக அப்படிலாம் செய்யாது…! சும்மா வதந்தி கிளப்பாதீங்க…. எல்லாமே கட்டுக்கதை …!!

அதிமுக தலைமை கழகத்தில் நேற்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது. எங்களுடைய கட்சி உள் விவகாரங்களில் பாரதிய   ஜனதா கட்சி என்னைக்கும் தலையிட்டது கிடையாது.  பிஜேபி அழுத்தத்தம் கொடுப்பதை போல பெரிய அளவுக்கு வதந்தியை கிளப்பி விடுகின்றனர் அமமுகவும், சசிகலாவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இணைவதற்கான எந்த சாத்தியம் இல்லை, 100% வாய்ப்பே இல்லை.

தினகரன் தலைமையில் கூட்டணி என்பது எள்ளிநகையாட கூடிய அளவுக்கு இருக்கின்றது. குள்ள நரிகள் கூட்டமாக இருக்கின்றது அமமுக; சிங்கமாக இருக்கின்ற சிங்க கூட்டமாக இருக்கின்றானே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். டிடிவி தினகரன் பேச்சை மக்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொள்வார்கள். கட்சியை பொறுத்தவரை  கொள்கை வேறு, கூட்டணி வேறு. எங்களுடைய கூட்டணியில் பாஜக ஒரு அங்கம். எங்களுடைய தலைமையில் இருக்காங்க . எங்களுடைய கட்சி உள் விவகாரங்களில் தலையிட மாட்டாங்க.

சசிகலா – அதிமுக இணைப்பு பற்றி அமித்ஷா பேசியது என்பது  வீணான கட்டுக்கதை. அதிமுக உள்விவகாரத்தில் பாஜக தலையிடாது. இது ஜனநாயக பண்பாக இருக்காதுன்னு அவங்களுக்கு தெரியும்.  எங்களுக்குன்னு ஒரு நிலைப்பாடு இருக்கு, எங்க கட்சி ஒரு மிகப்பெரிய கட்சி என்னும் போது எங்களுக்குன்னு ஒரு கொள்கை இருக்கு, லட்சியம் இருக்கு, எங்க தலைவர்கள் – நிர்வாகி இருக்காங்க, மாவட்ட செயலாளர்கள் இருக்காங்க, கிளைக்கழகத்தில் இருந்து எல்லா நிர்வாகியும்  இருக்காங்க. எந்த நிலை ஆனாலும் எங்களின் கட்சி தான் முடிவெடுக்க அதிகாரம் படைத்தது. நாங்கள் தான் தெளிவா முடிவெடுத்துட்டோம் என அமைச்சர் தெரிவித்தார்.

Categories

Tech |