முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நம்பிக்கையை நிலைபெறச் செய்வதற்காக அனுதினமும் மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார். பாதிக்கப்பட்ட இருக்கக்கூடிய மீனவர்கள் முதலமைச்சர் அவர்களை சந்தித்து அனைத்து துறைகளிலும் இருக்கக்கூடிய பிரச்சனைகளை எடுத்து சொல்லக்கூடிய வகையிலே மீனவர்கள், விவசாயிகள் அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டு அதற்கு தீர்வுக்கான வழிவகங்களை கண்டறிந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உங்களை சந்தித்தற்கு நன்றி என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, மத்திய அரசு மாநில உரிமைகளை பறிக்க கூடாது என்பது திராவிட முன்னேற்ற கழகத்தின் கருத்து. நிச்சயமாக மாநில உரிமைகள் பறிக்க படக்கூடிய எதையும் திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்தார்.