திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணா சிலை பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, “பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு அல்ல ஏவுகணையை வீசினாலும் தமிழகத்தில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது.
எங்கள் கொள்கையில் மக்களுக்கு எது நல்லது என்று படுகிறதோ அதனை செய்ய பாஜக ஒருபோதும் தவறாது. தற்போது காசு கொடுத்தால் தான் எல்லா வேலையும் நடக்கும் என்ற நிலையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. காசு இல்லையேல் எதுவும் செய்ய மாட்டோம் என்ற நிலைக்கு தமிழக அரசியல் களம் தள்ளப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களை நம்பியே பாஜக அரசியல் களத்தில் ஈடுபட்டுள்ளது.