நடிகை குஷ்பு ஜே.பி நட்டா தலைமையில் பாஜகவில் இணையவிருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து சற்றுமுன் பாஜக அலுவலகத்தை அடைந்தார்.
நடிகை குஷ்பு ஜே.பி நட்டா தலைமையில் பாஜகவில் இணையவிருப்பதாகவும் அதற்காக டெல்லி சென்றுள்ளதாகவும் இன்று காலை தகவல் கிடைத்தது.அதனையொட்டி நடிகை குஷ்புவை தேசிய செய்தி தொடர்பாளர் பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சி அதிரடியாக நீக்கியது.அதனையடுத்து சிலநிமிடங்களில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நடிகை குஷ்பு சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்.
மேலும் பணம்,புகழுக்காக நான் காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை என்றும், காங்கிரசில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர்களெல்லாம் அழுத்தம் கொடுக்கிறார்கள் என்றும் கடிதத்தில் கூறிருந்தார். இந்நிலையில் சற்று முன்பாக நடிகை குஷ்பு பா.ஜா.க அலுவலகத்தை அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.