ஆந்திரப்பிரதேச மாநிலம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி ஆந்திரா மாநிலத்தில் பாஜக வெற்றி பெற வைத்தால் மது பாட்டில் விலை ரூ.50 விற்கப்படும் என்று மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜீ அறிவித்துள்ளார். விஜயவாடாவில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் பேசிய அவர், மாநில அரசு அதிக விலைக்கு தரமற்ற மதுவை மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. போலியான பிராண்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து ஆந்திராவில் ஒவ்வொரு மதுவிற்காக மட்டுமே மாதத்திற்கு ரூ.12000 வரை செலவிடப்படுகிறது. அந்த பணத்தை தான் அரசு மக்களிடம் நலத் திட்டங்கள் என்ற பெயரில் செலவு செய்கின்றனர். மேலும் ஆந்திராவில் ஒரு கோடி பேர் மது அருந்துகிறார்கள். அந்த ஒரு கோடி பேரும் 2024 ஆம் ஆண்டு சட்டசபையில் பாஜகவிற்கு வாக்களித்தால் தரமான மது பாட்டில் விலை ரூ.75 விற்பனை செய்யப்படும். அதன் பிறகு அதனை குறைத்து ரூ.50 விற்பனை செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.